ஆசைக்கு இணங்க மறுத்த 14 வயது சிறுமி: ஜேர்மன் இளைஞர் செய்த கொடூரச் செயல்
ஜேர்மனியில், காணாமல் போன 14 வயது சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவளுக்கு அறிமுகமான 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இரண்டு 14 வயது சிறுமிகள்
கடந்த புதன்கிழமையன்று, பிராங்க்பர்ட்டுக்கு வடக்கே உள்ள Bad Emstal என்னுமிடத்தில், 14 வயது சிறுமி ஒருத்தி காணாமல்போனாள்.
அவளை பொலிசார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், வியாழக்கிழமையன்று அவளது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, அந்தச் சிறுமிக்கு அறிமுகமான 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாவது சம்பவம்
வியாழக்கிழமையன்று, 14 வயது சிறுமி ஒருத்தியைக் கொலை செய்த 30 வயது நபர் ஒருவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு ஜூலை மாதம், தெற்கு ஜேர்மனியிலுள்ள Gottenheim என்னுமிடத்தில், Ayleen என்னும் 14வயது சிறுமி காணாமல்போனாள்.
அவளும், Jan Heiko P (30) என்னும் நபரும் சமூக ஊடகம் ஒன்றில் ஆயிரக்கணக்கான குறுஞ்செய்திகளை பகிர்ந்துகொண்டது தெரியவரவே, பொலிசார் அவரைக் கைது செய்தனர். Ayleen தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால், அவளை Heiko கொடூரமாக கொலை செய்ததாக கூறிய நீதிபதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Heiko மீது, கொலை, வன்புணர்வு முயற்சி முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த Heiko, தனக்கு 14 வயது இருக்கும்போதே, 11 வயது சிறுமி ஒருத்தியை வன்புணர முயன்றது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |