வேலையில்லாமல் ஆடம்பரமாக வாழ்பவர்கள் குறித்து புகாரளிக்க கோரிய பொலிசார்: மக்கள் குசும்பு
பிரித்தானிய பொலிசார், வேலையில்லாமல் ஆடம்பரமாக வாழ்பவர்கள் யாரையாவது உங்களுக்குத் தெரிந்தால் தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு கோரியிருந்தார்கள்.
Do you know someone who lives a lavish lifestyle, but doesn’t have a job?
— South Yorkshire Police (@syptweet) August 24, 2024
Your intelligence is vital in helping us put those who think they’re 'untouchable' before the courts.
Find out how here-https://t.co/tpMYJkgdUP pic.twitter.com/GMcezBzapI
அதற்கு பதிலளித்த மக்கள், வேலையில்லாமல் ஆடம்பரமாக வாழ்பவர்கள் பட்டியலை வெளியிட்டுவருகிறார்கள்.
பட்டியலில் முதல் ஆளே மன்னர் சார்லஸ்தான்!
புகாரளிக்க கோரிய பொலிசார்
தெற்கு யார்க்ஷையர் பொலிசார், மோசடிப் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை நடத்தும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக, வேலையில்லாமல் ஆடம்பரமாக வாழ்பவர்கள் யாரையாவது உங்களுக்குத் தெரிந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
People reporting the royal family to the police for living suspiciously lavish lives without a job or any work to show for it is exactly what I needed to hear today!????????????????????????????#Grifters#AbolishTheMonarchy pic.twitter.com/wjuF9rRp3t
— Zandi Sussex (@ZandiSussex) August 28, 2024
வேலையில்லை, ஆனாலும், ஆடம்பரக் கார்களில் பவனி வந்துகொண்டு, வெளிநாடுகளில் சுற்றுலாவை அனுபவித்துக்கொண்டு, விலையுயர்ந்த பொருட்களை வாங்குபவர்கள் குறித்து தெரியவந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் என சமூக ஊடகம் ஒன்றில் தெரிவித்திருந்தார்கள்.
மக்கள் குசும்பு
South Yorkshire Police asked people to dob in suspicious rich people who don't work.
— BladeoftheSun (@BladeoftheS) August 29, 2024
The top 3 people reported were King Charles, Tommy Robinson and Nigel Farage.
I think they need to crack on with prosecution, don't you?
பொலிசாரின் கோரிக்கைக்கு பதிலளித்த மக்கள், ராஜ குடும்பத்தினர் முதல், முன்னாள் இந்நாள் பிரதமர்கள் வரை பலரையும் வம்புக்கிழுத்துள்ளார்கள்.
ஒருவர், ஆம், வேலையில்லாமல் ஆடம்பரமாக வாழும் ஒருவரை எனக்குத் தெரியும், அவர் பெயர் சார்லஸ், பக்கிங்காம் மாளிகையில் வாழ்கிறார் என குசும்பாக தெரிவித்துள்ளார்.
South Yorkshire police are asking us to dob in anybody who leads a lavish lifestyle but doesn't have a job. Let's start with the royal family, the two Tory blokes who bought £120m of development land for just a ton and Michelle Mone.
— David__Osland (@David__Osland) August 29, 2024
மற்றொருவர், பிரதமர் இல்லத்தில் துவங்குங்கள், பலர் சிக்குவார்கள் என்று வேடிக்கையாகக் கூறியுள்ளார். அந்த இடுகைகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |