நீண்ட நேரமாக அசைவின்றிக் கிடந்த இளம்பெண்: காப்பாற்ற விரைந்த பொலிசாருக்கு நேர்ந்த தர்மசங்கடம்
கலைக்கண்காட்சி அரங்கு ஒன்றில், நீண்ட நேரமாக இளம்பெண் ஒருவர் அசைவின்றிக் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
கதவை உடைத்து உள்ளே நுழைந்த பொலிசார்
லண்டனிலுள்ள அந்த கலைக்கண்காசி அரங்கத்தில் யாரோ ஒரு இளம்பெண் சூப் பாத்திரத்துக்குள் முகம் மூழ்கிய நிலையில் தலைகவிழ்ந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததால், அந்த அரங்கின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்கள்.
பொலிசாருக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்
அந்த பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என பரிசோதித்த பொலிசாருக்கு ஒரு ஏமாற்றம் காத்திருந்தது.
image thesun
ஆம், தலைகவிழ்ந்து கிடந்தது ஒரு பெண்ணே அல்ல, அது உண்மையான பெண்போல் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்த ஒரு பொம்மை.
இதற்கிடையில், ஒரு காபி அருந்தி வரலாம் என அதே கட்டிடத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ள காபி ஷாப்பிற்கு சென்றிருந்த அருங்காட்சியக ஊழியர் அரங்குக்கு திரும்ப, அங்கே கதவு உடைக்கப்பட்டு கிடக்க, பொலிசார் இருவர் தலையை சொறிந்துகொண்டு நிற்பதைக் கண்டு திகைத்துப்போயிருக்கிறார்.
கிறிஸ்டினா என்று அழைக்கப்படும் அந்த பொம்மை, அமெரிக்கக் கலைஞரான Mark Jenkins என்பவரால் வடிவமைக்கப்பட்டு, Laz Emporium என்னும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இப்படி கிறிஸ்டினாவைக் காப்பாற்ற மக்கள் ஓடிவருவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே, அக்டோபர் மாதம், லண்டனிலுள்ள வடிவமைப்பு பொருட்காட்சி ஒன்றில் கிறிஸ்டினாவைக் கண்ட சிலர், மருத்துவ உதவிக்குழுவினரை அழைத்தது குறிப்பிடத்தக்கது.
image thesun