லண்டனில் காவல்துறை வாகனம் ஏற்படுத்திய விபத்து: பிறக்காத குழந்தையுடன் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!
பிரித்தானியாவில் நடந்த காவல்துறை வாகன விபத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் பிறக்காத அவரது குழந்தை உயிரிழந்துள்ளனர்.
கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
தென்கிழக்கு லண்டனில் ஒரு குறிப்பிடப்படாத காவல்துறை வாகனத்துடன் நிகழ்ந்த விபத்தில் ஒரு கர்ப்பிணி பெண் மற்றும் அவரது பிறக்காத குழந்தை உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் எல்தம்(Eltham) பகுதியில் கிட்புரூக் பார்க் சாலையுடன்(Kidbrooke Park Road) இணையும் A20 சாலை சந்திப்பு அருகே நிகழ்ந்துள்ளது.
விபத்தை தொடர்ந்து லண்டன் ஆம்புலன்ஸ் சேவை, லண்டன் தீயணைப்புப் படை மற்றும் லண்டன் விமான ஆம்புலன்ஸ் ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இருப்பினும் மற்றொரு வாகனத்தில் இருந்த 38 வயதான கர்ப்பிணி பெண் மற்றும் அவரது பிறக்காத குழந்தை, தங்கள் காயங்களுக்கு பலியானதாக மெட் பொலிஸார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்கு முக்கிய காரணமான குறிப்பிடப்படாத காவல்துறை வாகனம் அவசர நிலைக்கு பதிலளித்துக் கொண்டிருந்ததா என்பது இதுவரை தெளிவாக இல்லை.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு
விபத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தலைமை துப்பறியும் கண்காணிப்பாளர் Trevor Lawry, விபத்து தொடர்பாக சுயாதீன காவல்துறை நடத்தை அலுவலகம்(IOPC) மற்றும் மெட் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு விசாரணையில் அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கு முக்கிய காரணமாக இருந்த காவல்துறை வாகனத்தில் இருந்த இரண்டு அதிகாரிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |