சுவிஸ் எல்லையில் கார் ஒன்றை சோதனையிட்ட பொலிசார்: காத்திருந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும்!
சுவிஸ் ஜேர்மன் எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சுவிஸ் பொலிசார் கார் ஒன்றை நிறுத்தியுள்ளார்கள்.
காருக்குள் கண்ட காட்சி
காரிலிருந்தவர்களை பொலிசார் இறங்கச் சொல்ல, மாஜிக் திரைப்படம் ஒன்றில் வருவதுபோல, காருக்குள் இருந்து ஆட்கள் இறங்கிக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.
ஒன்று, இரண்டு, மூன்று என ஆட்கள் காரிலிருந்து தொடர்ந்து இறங்கிக்கொண்டேயிருக்க, பொலிசார் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளார்கள்.
ஆம், ஏழு பேர் மட்டுமே அமரக்கூடிய அந்தக் காரில் மொத்தம் 23 பேர் பயணித்துள்ளார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அந்த 23 பேரில் 9 பேர் பெரியவர்கள், 14 பேர் சிறுபிள்ளைகள்.
Image. Credit: AFP Photo
சாரதிக்கு அபராதம்
அந்த காரை தற்காலிகமாக நிறுத்திவைத்த பொலிசார், பாதுகாப்பில்லாத வகையில் 23 பேரை ஒரே காரில் ஏற்றிவந்த அந்த காரின் சாரதிக்கு அபராதம் விதிக்க இருக்கிறார்கள்.
என்றாலும், ஆவணங்கள் சரிபார்ப்புக்குப் பின் அந்த காரை சுவிட்சர்லாந்துக்குள் அனுமதித்துள்ளார்கள் பொலிசார். ஆனால், 23 பேரையும் ஒரே காரில் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை!