பிரித்தானியாவில் இறைச்சி கொண்டுவந்த லொறி ஒன்றை சோதனையிட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரித்தானியாவின் வட அயர்லாந்தில் இறைச்சி கொண்டுவந்த லொறி ஒன்றை பொலிசார் சோதனையிட்டார்கள்.
லொறியை அவர்கள் எக்ஸ்ரே மூலம் ஆராய்ந்தபோது, இறைச்சிக்கடியில் ஒரு ரகசிய மறைவிடம் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.
மிக நேர்த்தியாக செய்யப்பட்ட குற்றச்செயல்
அந்த லொறிக்குள், உறையவைத்த இறைச்சிக்கடியில், பலகையால் அமைக்கப்பட்டிருந்த இருந்த மறைவிடத்தை பொலிசார் சோதனையிட்டபோது, அவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
PSNI
ஆம், 118 கிலோ கொக்கைன் என்னும் போதைப்பொருள் லொறிக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது. மிக நேர்த்தியாக அந்த லொறியை வடிவமைத்து, சாதாரணமாக பார்த்தால் எதுவும் தெரியாத வகையில் மறைவிடம் ஒன்றை அமைத்து, அதில் போதைப்பொருள் அடங்கிய பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்தது.
PACEMAKER
அவ்வகையில் 100 போதைப்பொருள் பொட்டலங்கள் இறைச்சிக்கடியில் மறைத்துவைக்கப்பட்டிருந்தன. அவற்றில் மதிப்பு 10 மில்லியன் பவுண்டுகள் ஆகும். வட அயர்லாந்து வரலாற்றிலேயே இவ்வளவு அதிக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்கிறார்கள் அதிகாரிகள்.
PSNI
PSNI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |