கனடாவில் காணாமல் போன 21 வயது இளம்பெண் சடலமாக கண்டெடுப்பு
கனடாவில் காணாமல் போன 21 வயது இளம்பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
எட்மண்டனை சேர்ந்த 21 வயது பெண்ணான Davinia McKinney கடந்த 28ஆம் திகதி கடைசியாக எட்மண்டனின் மேற்கு முனையில் உள்ள பெல்மீட் சுற்றுப்புற பகுதியில் காணப்பட்டார்.
McKinney, வீட்டில் இருந்து வெளியே போன போது எட்மண்டனில் கடுமையான குளிர் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், அவர் வானிலைக்கு ஏற்றவாறு ஆடை அணியவில்லை என்றும், அவரது பர்ஸ், செல்போனை வீட்டிலேயே விட்டுச் சென்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
McKinney காணாமல் போன சமயத்தில் அப்பகுதியில் குளிர் காற்று -35 C ஆக இருந்தது. இந்த நிலையில் ஞாயிறு அன்று McKinney சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் மரணத்தில் குற்றச்செயல்கள் எதுவும் இல்லை என பொலிசார் கருதப்படுகிறார்கள். இது தொடர்பில் விரைவில் மேலதிக தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.