''குண்டு வீச்சு புகாரையே பதிவு செய்யவில்லை'' போலீஸ் மீது ஆளுநர் மாளிகை புகார்
ராஜ்பவன் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை என காவல்துறை மீது ஆளுநர் மாளிகை புகாரளித்துள்ளது.
குண்டு வீச்சு
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ராஜ்பவன் வாயில் முன் நேற்று மாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இச்சம்பவத்தை செய்த கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். கருக்கா வினோத் என்பவர் ஏற்கெனவே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உட்பட 14 குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்று வெளிவந்துள்ளது.
ஆளுநர் மாளிகையின் பதிவு
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை.
தன்னிச்சையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 26, 2023
அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நாள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக் கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |