மனைவி கொடுமைக்காரி.. என்னை போல் அழகான பெண் வாழ்வில் வேண்டும் என்றார்! நடிகை சாந்தினி வழக்கில் புதிய முக்கிய தகவல்
பிரபல நடிகை சாந்தினியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான புகார் குறித்து, சட்ட நிபுணர்களுடன் பொலிசார் ஆலோசனை நடத்தி வருவதோடு இந்த வழக்கு வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மலேசியாவை பூர்விகமாக கொண்ட நடிகை சாந்தினி, தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமடைந்தவர்.
இந்த நிலையில், நடிகை சாந்தினி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அவரது புகார் கடிதத்தில், நான் மலேசியா குடியுரிமைப் பெற்ற திருமணமாகாத பெண். மலேசியா சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தூதரகத்தில் பணிபுரிந்த போது, அடிக்கடி என் அலுவலக பணிகளுக்காக இந்தியா வந்து செல்வது வழக்கம்.
கடந்த 2017-ம் ஆண்டு, அ.தி.மு.க அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், சுற்றுலா வளர்ச்சி துறை சம்பந்தமாக என்னைப் பார்க்க விரும்புவதாக எனக்கு தெரிந்த நண்பர் பரணி என்னிடம் கூறினார்.
அதனால், நான் அமைச்சரின் இல்லத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நேரில் மணிகண்டனைச் சந்தித்தேன். அன்றைய தினம் சுற்றுலா துறை சம்பந்தமாக என்னிடம் மணிகண்டன் பேசினார்.
மலேசியாவில் தொழில் முதலீடு செய்ய போவதாகவும் அந்த தொழில் முதலீடு சம்பந்தமாக நாம் இருவரும் கலந்து பேச வேண்டும் என்று கூறி என்னுடைய செல்போன் நம்பரைப் பெற்றுக் கொண்டார்.
அன்றைய தினம் மாலையில் எனக்கு அமைச்சர் மணிகண்டன் போனில் பேசினார். சில தினங்களில் என்னிடம் தனிப்பட்ட முறையில் அமைச்சர் மணிகண்டன் பேச ஆரம்பித்தார்.
நான் மிகவும் அழகாக இருப்பதாகவும், அவருக்கு என்னை மிகவும் பிடித்து விட்டதாகவும், ஒரு கட்டத்தில் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் என்னிடம் கூறினார்.
மேலும், அவர் குடும்ப வாழ்வில் அவர் மனைவியால் எந்த சந்தோஷமும் இல்லை என்றும் மனைவி ஒரு கொடுமைக்காரி என்றும், என்னைப் போல ஒரு அழகான பெண் என் இல்லற வாழ்வில் இருந்தால் என்னுடைய வாழ்க்கை மிகவும் அழகாகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கும் என்று தெரிவித்தார்.
அவரின் ஆசை வார்த்தைகளை நம்பி, திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில், இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம்.
இதனால் மூன்று முறை கருவுற்றேன், ஆனால் கட்டாயப்படுத்தி கருவை கலைக்க வைத்ததோடு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இதுகுறித்து, சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில், சாந்தினி புகார் அளித்தார். மணிகண்டன், தன்னுடன் குடும்பம் நடத்தியதற்கான ஆதாரங்களையும் சமர்பித்துள்ளார்.
ஆனால், சாந்தினியின் குற்றச்சாட்டை, மணிகண்டன் மறுத்து வருகிறார்.
இந்த நிலையில் சாந்தினியின் புகார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு தற்போது மாற்றப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் இது குறித்து பொலிசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.