காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை
தன் காரை நிறுத்திய பொலிசாரிடம், தன் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறி தப்ப முயன்றார் பிரித்தானியர் ஒருவர்.
தெரியவந்த உண்மை
இங்கிலாந்தின் Staffordshireஇல், காரில் செல்லும்போது மொபைல் பயன்படுத்திய ஒருவரை தடுத்து நிறுத்தினார்கள் பொலிசார்.
அவர்களிடம் தன் தன் மனைவிக்கு பிரசவ வலி என்றும், தன்னை விட்டுவிடுமாறும் கூறி தப்ப முயன்றார் பிரித்தானியர் ஒருவர்.
ஆனால், பொலிசார் அவரது காரை சோதனையிட்டபோது, காரின் பின்பக்கத்தில் 50,000 போலி சிகரெட்களை அவர் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. ஆகவே, பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
We stopped this 🚗 M6 SB J13 due to mobile phone. Driver pretended his wife was in labour & provided false details.
— StaffsRCT (@StaffsRCT) October 2, 2025
We saw straight through them and found them to be disqualified with 50,000 counterfeit cigarettes in the boot. Not today❗️#OpLightning #Team4RCT pic.twitter.com/vV1zCczhyv
அத்துடன், வாகனம் ஓட்ட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையும் மறைத்துள்ளார் அவர்.
அது தொடர்பாக தங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் பொலிசார் வெளியிட்டுள்ள இடுகை ஒன்றில் அந்த நபரின் காரின் பின்னால் அவர் சிகரெட் பாக்கெட்களை மறைத்துவைத்திருப்பதையும், அவர் விலங்கிடப்பட்டு அமரவைக்கப்பட்டுள்ளதையும் காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |