இன்னும் 100 நாட்கள்... நூற்றுக்கணக்கானோரை பாரீஸிலிருந்து வெளியேற்றிய பொலிசார்
ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில், பாரீஸில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கானோரை பொலிசார் அங்கிருந்து வெளியேற்றினார்கள்.
பாரீஸை ’அழகுபடுத்தும்’ அதிகாரிகள்
ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இன்னும் சரியாக நூறு நாட்கள் இருக்கும் நிலையில், வெளிநாட்டவர்கள் ஏராளமானோர் விளையாட்டுப் போட்டிகளைக் காண வருவார்கள் என்பதால், பிரான்ஸ் தலைநகர் பாரீஸை ’அழகுபடுத்தும்’ நடவடிக்கைகளை அதிகாரிகள் துவக்கியுள்ளார்கள்.
அவ்வகையில், Vitry-sur-Seine என்னுமிடத்திலுள்ள, பயன்பாட்டிலில்லாத கட்டிடம் ஒன்றில் தங்கியிருந்த சுமார் 450 பேரை பொலிசார் வெளியேற்றினார்கள்.
Photograph: Emmanuel Dunand/AFP/Getty Images
அவர்களில் பலர் முறைப்படி அகதி நிலை பெற்றவர்கள், முறைப்படி பிரான்சில் தங்கியிருக்கவும், வேலை செய்யவும் அனுமதி பெற்றவர்கள். ஒரே பிரச்சினை, அவர்களுக்கு தங்க இடம் இல்லை. ஆகவே, அவர்கள் அந்த கட்டிடத்தில் தங்கியிருந்தார்கள்.
ஆனால், ஒலிம்பிக் போட்டிகளைக் காரணம் காட்டி அவர்களை அங்கிருந்து வெளியேற்றிய அதிகாரிகள், அவர்களை வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்கிறார்கள். விடயம் என்னவென்றால், அவர்களில் பலர் பாரீஸில் வேலை செய்பவர்கள்.
Photograph: Emmanuel Dunand/AFP/Getty Images
ஒலிம்பிக் போட்டிகளுக்காக இப்படி அகதிகளையும், புகலிடக்கோரிக்கையாளர்களையும், வீடற்றவர்களையும் அப்புறப்படுத்திவரும் அரசின் இந்த நடவடிக்கைக்கு தொண்டு நிறுவனங்கள் பல கண்டனம் தெரிவித்துவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |