பிரித்தானியாவில் பூட்டிய வீட்டில் கிடந்த 2 சடலங்கள்! விசாரணையில் பொலிஸ்
பிரித்தானியாவில் 300,000 பவுண்டுகள் மதிப்புள்ள ஒரு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இங்கிலாந்தின் வடக்கு நார்தம்ப்டன்ஷைர், Kettering-ல் உள்ள Slate Drive பகுதியில், 300,000 பவுண்டுகள் மதிப்புள்ள ஒரு வீட்டில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இரன்டு சடலங்களை பொலிஸார் கண்டெடுத்தனர்.
இறந்தவர்கள் இருவரும் கணவன் மனைவியாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அவர்களின் வயது, பெயர் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இருவரும் அந்த வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளது தெரியவந்தது.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு 15-க்கும் மேற்பட்ட பொலிஸார் விசாரணைக்காக குவிக்கப்பட்டனர், மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் புலனாய்வு பொலிஸார் ஆய்வுமேற்கொண்டு வருகின்றனர்.
சிசிடிவி மற்றும் டோர் பெல் கேமரா காட்சிகள் உட்பட இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், போஸ்ட்மார்ட்டம் பரிசோதனைகள் வார இறுதியில் நடத்தப்பட உள்ளதாக அந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






