பிரித்தானியாவில் 2 நாட்களாக தேடப்பட்ட 17 வயது சிறுமி பிணமாக கண்டெடுப்பு!
பிரித்தானியாவில் இரண்டு நாட்களாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 17 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின பீக் மாவட்டத்தில், டெர்பிஷைர் கவுன்டியில் உள்ள Hayfield பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிலிருந்து, ஏமி ஹால் (Amy Hall) எனும் 17 வயது சிறுமி வெளியே சென்றார்.
கடந்த வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற அப்பெண், இரவு வீடு திரும்பாத நிலையில், அவரது பெற்றோர் டெர்பிஷைர் பொலிஸாரிடம் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, பொலிஸார் சிறுமியை 2 நாட்களாக தேடிவந்தனர். அவர் கடைசியாக, வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருப்பதும், அவரது வீட்டிற்கு அருகில் உள்ள செட் பள்ளத்தாக்கு பாதையை நோக்கி செல்வதும், பிறகு மே குயின் மைதானத்தை விட்டு வூட் லேனுக்கு நடந்து செல்வதும் பல சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறகு அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என்பது குறித்து ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை நியூ மில்ஸ் அருகே Birch Vale பகுதியில், 20 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண்ணின் சடலம் கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, பொலிஸார் ஆய்வு செய்ததில், அப்பெண் 2 நாட்களாக தேடப்பட்டுவரும் ஏமி ஹால் என்று உறுதிசெய்தனர்.
இருப்பினும், முறையாக உடலை அடையாளம் காண்பதற்காக, அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், அவரது மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் சந்தேகத்திற்கிடமானவை என்று நம்பப்படவில்லை என்று டெர்பிஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஏமி ஹாலின் மரணம் மர்மம் நிறைந்ததாக உள்ள நிலையில், தற்போது பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

