புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய பொலிஸார்
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பொலிஸாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 வயது சிறுவன்
ஆந்திரப்பிரதேச மாநிலம், குண்டூரைச் சேர்ந்த சிறுவன் மோகன் சாய் (7). கடந்த ஆண்டு இவர் படிக்கும் பள்ளியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, மோகன் சாய்க்கு ரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
பின்பு, ஐதராபாத்தில் பசவதாரகம் கேன்சர் இன்ஸ்டியூட்டில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், சிறுவனுக்கு காவல்துறை அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததை மருத்துவர்கள் அறிந்தனர்.
ஆசையை நிறைவேற்றிய பொலிஸார்
இதனையடுத்து, மருத்துவர்கள் இதுகுறித்து தொண்டு அமைப்பிடம் தெரிவித்தனர். பின்னர், பசவதாரகம் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஊழியர்கள் தனியார் அறக்கட்டளை மூலமாக இந்த தகவலை தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் சிறுவனின் ஆசையை நிறைவேற்ற பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தினர் ஒப்புக்கொண்டனர்.
பின்பு, ஒரு நாள் காவல் அதிகாரியாக சிறுவனுக்கு சீருடை அணிவிக்கப்பட்டு காவல் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிறுவனை காவல் அதிகாரிகளுக்கான இருக்கையில் அமர வைத்தனர். அங்கு, அவரிடம் காவல்துறை செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டது.
இறுதியில், சிறுவனுக்கு பரிசுப்பொருட்களை வாங்கி கொடுத்த காவல்துறையினர் மீண்டும் புற்று நோய் சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |