வலிப்புவந்து துடித்த இளம்பெண்ணின் ஆடை விலகிய உடலை கேலி செய்த பொலிசார்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள சம்பவம்

United Kingdom
By Balamanuvelan Jan 31, 2024 06:15 AM GMT
Report

இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவருக்கு வலிப்புவந்து அவர் துடித்துக்கொண்டிருந்தபோது அவரது ஆடை விலக, அவரது உடலை பொலிசார் கேலி செய்தது தொடர்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

தவறாக கைது செய்யப்பட்ட இளம்பெண்

கடந்த ஆண்டு, இங்கிலாந்திலுள்ள, Berkshire என்னுமிடத்தில் இளம்பெண் ஒருவர் யாரையோ தாக்கியதாக சந்தேகத்தின்பேரில் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இரவு நேரத்தில் அந்த 22 வயது இளம்பெண்ணக் கைது செய்த பொலிசார், அவரை வேனில் ஏற்றிச் செல்லும்போது, திடீரென அந்த இளம்பெண்ணுக்கு வலிப்பு வந்துள்ளது. கைகால்கள் இழுத்துக்கொள்ள அவர் துடிதுடித்துக்கொண்டிருக்கும்போது, அவரது உடை விலகியுள்ளது.

வலிப்புவந்து துடித்த இளம்பெண்ணின் ஆடை விலகிய உடலை கேலி செய்த பொலிசார்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள சம்பவம் | Police Fun Of The Young Woman S Undressed Body

இந்தக் காட்சிகள் அவரைக் கைது செய்த பொலிசார் அணிந்திருந்த கமெராவில் பதிவாகியுள்ளன. அந்த வேனில் ஒரு பெண் பொலிசாரும், பொலிஸ் பயிற்சி பெறும் மாணவர் ஒருவரும் மற்றொரு ஆண் பொலிசாரும் இருந்துள்ளார்கள்.

அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். பின்னர் அவர் குற்றவாளியே அல்ல, அவர்தான் தாக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

ஆடை விலகிய உடலை கேலி செய்த பொலிசார்

இந்நிலையில், அன்று மாலை, அந்த பெண் பொலிசார், தனது கமெராவில் பதிவான காட்சியை தனது லாப்டாப்பில் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். உடனே மூன்று ஆண் பொலிசாரும், அவருடன் இணைந்துகொண்டுள்ளார்கள்.

வலிப்புவந்து துடித்த இளம்பெண்ணின் ஆடை விலகிய உடலை கேலி செய்த பொலிசார்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள சம்பவம் | Police Fun Of The Young Woman S Undressed Body

அவர்கள், அந்தப் பெண்ணின் மார்பைக் குறித்து மோசமாக விமர்சித்ததுடன், பொலிசாரில் ஒருவர் அவரது அந்தரங்கத்தைப் பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் மேலும் ஒரு ஆண் பொலிசாரும் அவர்களுடன் இணைந்துகொள்ள, இந்தப் பெண்ணுடன் உடல்ரீதியாக உறவு கொள்ள எவ்வளவு பணம் கொடுக்கலாம் என அவர் கேட்க, ஒருவர் 500,000 பவுண்டுகள் கொடுக்கலாம் என்றும், மற்றொருவரோ, 250 பவுண்டுகள் போதும் என்றும் கூறி கேலி செய்து அனைவரும் சிரித்துள்ளார்கள்.

புகார் தெரிவித்த மாணவர்

சம்பவம் நடந்தபோது உடன் இருந்த பொலிஸ் பயிற்சி மாணவர் இந்த விடயம் குறித்து புகாரளிக்க, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பொலிசாராக பணியாற்ற அவருக்கு தகுதி இல்லை என்று கூறி அவரை பணிநீக்கம் செய்துள்ளார்கள்.

இந்த விடயம் குறித்து அறிந்த பிரித்தானிய ஊடகம் ஒன்று, பாதிக்கப்பட்ட பெண்ணைத் தேடிக்கண்டுபிடித்துள்ளது. அவர் அந்த பொலிசாருக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என கோர, தற்போது பொலிஸ் ஒழுங்கு முறை அமைப்பு இந்த அதிரவைக்கும் சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது.

வலிப்புவந்து துடித்த இளம்பெண்ணின் ஆடை விலகிய உடலை கேலி செய்த பொலிசார்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள சம்பவம் | Police Fun Of The Young Woman S Undressed Body

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US