லண்டனில் புலம்பெயர்தல் எதிர்ப்பு, இனவெறுப்பு எதிர்ப்பு பேரணிகள் நடத்த திட்டம்: தயார் நிலையில் பொலிசார்
லண்டனில் இன்று வலதுசாரியினர் மற்றும் புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்புகள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளன.
மறுபக்கம், இனவெறுப்புக்கு எதிரான அமைப்புகளும் பேரணிகள் நடத்த திட்டமிட்டுள்ளன.
தயார் நிலையில் பொலிசார்
லண்டன் விக்டோரியா ரயில் நிலையத்தில், Unite the Kingdom என்னும் பெயரில், புலம்பெயர்தல் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு பேரணி ஒன்றிற்குத் திட்டமிட்டுள்ளது.
அதே நேரத்தில், அந்த பேரணிக்கு எதிராக, நாடாளுமன்றத்துக்கு அருகில் இனவெறுப்பு எதிர்ப்பு அமைப்பு மற்றும் வர்த்தக யூனியன்கள் எதிர் திசையில் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஆகவே, இந்த எதிரெதிர் கொள்கைகள் கொண்ட அமைப்புகள் பேரணிகள் நடத்துவதால் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் அந்த இடத்தில் பொலிசார் குவிக்கப்பட்டுவருகிறார்கள்.
மத்திய லண்டனில் இன்றைய நாள் பிஸியாக இருக்கலாம் என்பதால், நாங்கள் அதை எதிர்கொள்ளத் தயராக உள்ளோம் என பொலிஸ் இணை ஆணையரான Rachel Williams தெரிவித்துள்ளார்.
ஜூலை மாத இறுதியில், Southport என்னுமிடத்தில் மூன்று பிள்ளைகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கொலையாளி ஒரு புலம்பெயர்ந்தோர் என தவறான தகவல் பரவியதால் வன்முறை வெடித்தது நினைவிருக்கலாம்.
புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஹொட்டல்கள் மற்றும் மசூதிகளைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட அந்த வன்முறையைத் தொடர்ந்து 1,500க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |