லண்டனில் தந்தையுடனிருந்த சிறுமியைக் கடத்த முயன்ற இளம்பெண்
Police hunting woman who tried to kidnap a little girl: சிறுமி ஒருத்தியைக் கடத்த முயன்ற பெண்ணொருவரை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
லண்டன் சுரங்க ரயில் நிலையம் ஒன்றில், தன் தந்தையுடனிருந்த சிறுமியைக் கடத்த முயன்ற ஒரு பெண்ணை பொலிசார் தேடிவருகிறார்கள்.
சிறுமியிடம் பேச்சுக் கொடுத்த பெண்
கடந்த வியாழக்கிழமை, லண்டனிலுள்ள West Ham சுரங்க ரயில் நிலையத்தில், ஏழு வயது சிறுமி ஒருத்தி தன் தந்தையுடன் நின்றுகொண்டிருந்திருக்கிறாள்.

அப்போது, அவளருகே வந்த பெண்ணொருவர் அந்தச் சிறுமியிடம் மெல்ல பேச்சுக்கொடுத்துள்ளார்.
உன்னை நான் தூக்கி வைத்துக்கொள்ளட்டுமா என மெதுவாக அந்தச் சிறுமியிடம் கேட்ட அந்தப் பெண், அவளது கையைப் பிடிக்க முயல, அவளது தந்தை அதை கவனித்துவிட்டிருக்கிறார்.
உடனே தன் மகளை தூக்கிக்கொண்டு அவர் அங்கிருந்து நகர, அவர் அந்தச் சிறுமியை கடத்திச் செல்வதாக அக்கம்பக்கத்தில் நின்றவர்களிடம் கூறிவிட்டு, யாரும் எதிர்பாராத நேரத்தில் அங்கிருந்து ஓடியுள்ளார்.
பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, அந்தப் பெண் குறித்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள அவர்கள், அந்தப் பெண் குறித்து யாருக்காவது தெரியவந்தால் தங்களுக்கு தகவல் கொடுக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.