பிரான்சில் இளம்பெண் மாயம்... கண்டுபிடிக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த மொபைல்: கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு
வடமேற்கு பிரான்சில் ஜாகிங் சென்ற 17 வயது பெண் ஒருவர் மாயமாகியுள்ளதைத் தொடர்ந்து, அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திங்கட்கிழமை மாலை Mayenne என்ற இடத்தில் ஜாகிங் செய்துகொண்டிருந்த அந்த 17 வயது பெண் மாயமாகியுள்ளார். அந்த பெண் வழக்கமான நேரத்திற்கு வீடு திரும்பாததால், அவரது தந்தை மகளைத் தேடிச்சென்றுள்ளார்.
அப்போது அவரது மொபைல் மற்றும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாட்ச் ஆகியவை மட்டும் ஓரிடத்தில் கிடப்பதை அவர் கண்டுள்ளார். அவற்றில் இரத்தம் பட்டிருப்பதைக் கண்ட அந்த பெண்ணின் தந்தை உடனடியாக பொலிசாருக்குத் தகவலளித்துள்ளார்.
உடனடியாக, 200 பொலிசார், மோப்பநாய்கள், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் உதவியுடன் நிலத்திலும், நதி ஒன்றிலும் தேடும் நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.