வேகமாக வந்த ரயில்... புலம்பெயர்ந்தோர் செய்த பயங்கர செயல்
ஜேர்மனியில், புலம்பெயர்ந்தோர் ஒருவர் தன்னருகே நின்ற இளம்பெண்ணை இழுத்துக்கொண்டு வேகமாக வந்துகொண்டிருந்த ரயில் முன் பாய்ந்த விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
புலம்பெயர்ந்தோர் செய்த பயங்கர செயல்
வியாழக்கிழமை இரவு, ஜேர்மனியின் Wandsbek-Markt ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

ரயில் ஒன்று ரயில் நிலையத்துக்குள் நுழைய, பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த சூடான் நாட்டவரான 20 வயது இளைஞர் ஒருவர், தன்னருகே நின்றுகொண்டிருந்த 18 வயதுடைய இளம்பெண்ணொருவரைப் பிடித்து இழுத்துக்கொண்டு வேகமாக வந்துகொண்டிருந்த ரயில் முன் குதித்துள்ளார்.
அங்கு நின்றுகொண்டிருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைய, பயணிகள் கண் முன்னேயே அந்த இருவரும் கொல்லப்பட்டுள்ளார்கள்.
அந்த ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் அல்ல என கருதப்படும் நிலையில், ஏன் அந்த புலம்பெயர்ந்தோர் அப்படி ஒரு பயங்கர செயலை செய்தார் என்பது தெரியவில்லை.
அந்தப் பெண் எந்த நாட்டவர் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள அந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |