மாஸ்க் அணியவேண்டாம்... விதி மீறிய சுவிஸ் முதியோர் இல்லத்தில் ஒன்பது உயிரிழப்புகள்
சுவிஸ் மாகாணம் ஒன்றில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் பணி புரிவோர் மாஸ்க் அணியவேண்டாம் என அந்த முதியோர் நிர்வாகிகள் அறிவுறுத்திய நிலையில், அங்கு ஒன்பது பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ் மாகாணமான Obwaldenஇல் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் இரண்டு வாரங்களில் ஒன்பது பேர் பலியானதைத் தொடர்ந்து பொலிசார் விசாரணையில் இறங்கியுள்ளார்கள்.
அதுவும், வெள்ளிக்கிழமைக்கு பிறகு மட்டும் இரண்டு பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள். உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையோர் கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள்.
இதற்கிடையில், அந்த முதியோர் இல்லத்தில் மாஸ்க் அணிதல் தொடர்பான விதிகள் பரவலாக புறக்கணிக்கப்பட்டதுடன், முதியவர்களை கவனித்துக்கொள்ளும் பணியிலிருந்தவர்களை மாஸ்க் அணியவேண்டாம் என முதியோர் இல்ல நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதாவது, மாஸ்க் அணிந்தால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது முதியவர்களுக்கு புரியாது என்பதால் மாஸ்க் அணியவேண்டாம் என கூறியதாக நிர்வாகம் தெரிவிக்கிறது.
ஆனால், முதியோர் இல்லங்களில் மாஸ்க் அணிதல் அவசியம் என சட்டம் கூறுகிறது.
ஆகவே, அந்த முதியோர் இல்ல மரணங்கள் தொடர்பாக விசாரணை துவக்கப்பட்டுள்ளது.