குழந்தை கார் ஓட்டுவதைக் கண்டு அதிர்ந்த பொலிசார் எடுத்த நடவடிக்கை
ஜேர்மனியில், குழந்தை ஒன்று காரின் ஸ்டியரிங் வீலை பிடித்திருப்பதைக் கண்ட பொலிசார் உடனடியாக அடுத்த சிக்னலிலுள்ள பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
குழந்தை கார் ஓட்டுவதைக் கண்டு அதிர்ந்த பொலிசார்
செவ்வாய்க்கிழமை இரவு, மேற்கு ஜேர்மனியிலுள்ள Rhineland-Palatinate மாகாணத்தில், பெண்ணொருவர் கார் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துவதை கவனித்துள்ளனர் பொலிசார். உற்றுக் கவனிக்கும்போது, வேறொரு அதிர்ச்சியளிக்கும் விடயத்தை அவர்கள் கண்டுள்ளனர்.

ஆம், அந்தப் பெண் மொபைலில் ஏதோ டைப் செய்துகொண்டிருக்க, அவரது மடியிலிருந்த இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தை ஸ்டியரிங் வீலை பிடித்திருந்திருக்கிறது.
உடனடியாக அடுத்த சிக்னலிலிருக்கும் பொலிசாருக்கு அவர்கள் தகவல் கொடுக்க, Ramstein என்னுமிடத்தில் அவரது காரை ஓரங்கட்டிய பொலிசார், அவரை விசாரிக்க, அந்தப் பெண்ணுக்கு தான் செய்த தவறு புரியவேயில்லை.
தன் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றும், தான் உணவகம் ஒன்றிற்கு உணவு வாங்குவதற்காக சென்றுகொண்டிருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார் அவர்.
அந்தப் பெண்ணின் செயல் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்ததால், குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பெண் மீது முறைப்படி விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |