நடிகை ஷில்பா ஷெட்டியிடம் நடந்த 4 மணிநேர விசாரணை: வாக்குமூலம் பதிவு
நிதி மோசடி வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் மும்பை பொலிஸார் 4 மணிநேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர்.
ஷில்பா ஷெட்டி
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோத்தாரி, கடன் மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட ரூ.60 கோடி மோசடி செய்ததாக, நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) ஷில்பா ஷெட்டியிடம் அவரது வீட்டில் வைத்து விசாரணை நடத்தியது.
பொலிஸார் வட்டாரங்களின்படி, இந்த விசாரணை நான்கு மணிநேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்டது. அங்கு அதிகாரிகள் அவரது விளம்பர நிறுவனத்தின் வங்கிக் கணக்கு தொடர்பானதாகக் கூறப்படும் நிதி பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களைத் தேடினர்.
ரூ.60 கோடி
அப்போது செயல்படாத தனது விளம்பர நிறுவனமான Best Deal TV Pvt Ltd-யில் இருந்து ரூ.60 கோடி நிதியை திருப்பி அனுப்பியதாகக் கூறப்படும் ஆவணங்களை ஷில்பா ஷெட்டி சமர்பித்தார். தற்போது அவர் அளித்த ஆவணங்கள் ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஷில்பா ஷெட்டியும், ராஜ் குந்த்ராவும் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாகக் கூறி, அவர்கள் மீது மும்பை பொலிஸார் லுக்அவுட் சுற்றறிக்கை வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த விசாரணை நடந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |