அமெரிக்காவில் பட்டப்பகலில் தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்ட பெண்! விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த பகீர் தகவல்
அமெரிக்காவில் பெண் ஒருவர் சாலையில் தலை துண்டித்து கொல்லப்பட்டு கிடந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Minnesota, Shakopee பகுதியிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.
புதன்கிழமை மிதயம் 2:30 மணிக்கு Shakopee-வில் சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் பெண் ஒருவர் தலை துண்டித்து கத்தியால் சரமாரியாக குத்தி கொல்லப்பட்டு கிடப்பதை பார்த்த அப்பகுதி வசிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவயிடத்திற்கு விரைந்து உடல் கைப்பற்றி விசாரணையை தொடங்கிய பொலிசார், கொல்லப்பட்ட பெண் 55 வயதான America Mafalda Thayer என கண்டுபிடித்துள்ளனர்.
கியூபாவில் இருந்து புலம்பெயர்ந்த Thayer, உள்ளூர் கடையில் வேலை செய்துவந்துள்ளார்.
கடையில் உள்ள ஊழியர்களிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, Thayer, 42 வயதான Alexis Saborit நபருடன் பழகி வந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், Thayer கொலை தொடர்பில் Alexis Saborit கைது செய்த பொலிசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருதாக தெரிவித்துள்ளனர்.