லண்டன் பேருந்தில் பயணி ஒருவரை பார்த்து முகம்சுழித்த சக பயணிகள்! தெளிவான புகைப்படங்களுடன் பொலிஸ் முக்கிய தகவல்
லண்டன் பேருந்தில் பெண் பயணிகள் முன்னிலையில் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர் தொடர்பிலான முக்கிய தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு லண்டனில் தான் இச்சம்பவம் ரூட் 149 பேருந்து பயணித்தில் கடந்த மாதம் 5ஆம் திகதி நடந்துள்ளது. அன்றைய தினம் காலை 7.30 மணியளவில் பேருந்தானது கொண்டிருந்தது.
அப்போது பேருந்தில் இருந்த ஆண் பயணி ஒருவர் அங்கிருந்த 20களில் உள்ள 2 பெண் பயணிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் அநாகரீகமான முறையிலும், அருவருப்பான முறையிலும் நடந்து கொண்டிருக்கிறார், அவரின் செயல்களை பார்த்து முகம் சுழித்த பயணிகள் அதிர்ச்சியும் அடைந்தனர்.
இதன்பின்னர் அந்த ஆண் பயணி டி பேருந்து நிலையத்தில் இறங்கி Shoreditch தெரு வழியாக சென்றுவிட்டார், அவர் அந்த பகுதியில் பணிபுரிபவராக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய நபரின் தெளிவான இரண்டு புகைப்படங்களை தற்போது பொலிசார் வெளியிட்டுள்ளனர், இதன் மூலம் அவர் எளிதாக அடையாளம் காணப்படலாம் என தெரிகிறது.
அவரிடம் சம்பவம் தொடர்பில் பேசி விசாரிக்க வேண்டும் என கூறியுள்ள பொலிசார் அவரின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் யாருக்காவது தெரிந்தால் தங்களிடம் வெளியிடலாம் என தெரிவித்துள்ளனர்.