கனடாவில் காரை நிறுத்திவிட்டு பொதுஇடத்தில் அநாகரீகமான செயலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி பணியிடை நீக்கம்
கனடாவில் பொது இடத்தில் அநாகரீகமான செயலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ரொறன்ரோவை சேர்ந்த அதிகாரியே இவ்வாறான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்
. விட்பை நகரில் சில தினங்களுக்கு முன்னர் நபர் ஒருவர் பொதுவெளியில் காரை நிறுத்திவிட்டு அதன் அருகில் இருந்தபடி அநாகரீகமான செயலில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.
இளம்பெண் உள்ளிட்ட சிலர் இதை பார்த்த நிலையிலேயே பொலிசாருக்கு தகவல் தரப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ரயன் வால்டர்ஸ் (33) என்பவரை கைது செய்தனர்.
இதன்பின்னரே அவர் பொலிஸ் அதிகாரி என தெரியவந்தது. தற்போது ரயன் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
கடந்த ஆறு ஆண்டுகளாக ரயன் பொலிஸ் பணியில் இருந்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.