பிரித்தானியாவில் பொலிஸ் அதிகாரி மீது மோதிய லொறி: A19 சாலையில் துயர சம்பவம்
பிரித்தானியாவில் A19 சாலையில் நடந்த விபத்தின் போது உதவி பணியில் ஈடுபட்டு இருந்த பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவின் சாலையில் நடந்த பயங்கரம்
பிரித்தானியாவின் வடக்கு யார்க்ஷயரில்(North Yorkshire) உள்ள பேக்பி(Bagby) அருகே A19 சாலையில் கடந்த சனிக்கிழமை காலை மோசமான விபத்து ஒன்று அரங்கேறியது.
அப்பகுதியில் ஏற்பட்ட முந்தைய சம்பவத்தில் சிக்கிய வாகன ஓட்டிகளுக்கு உதவிய பொலிஸார் மீது லொறி ஒன்று மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது.
இதில் பலத்த காயமடைந்த பொலிஸ் அதிகாரி பிசி ரோஸி ப்ரியர்(PC Rosie Prior) பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் நார்ஸ்பரோ(Knaresborough) பகுதியை சேர்ந்த மற்றொரு வாகன ஓட்டி ரையன் வெல்போர்ட் (41) பரிதாபமாக உயிரிழந்தார்.
வெல்போர்ட்டின் காரில் பயணித்த இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லொறியை ஓட்டிய 65 வயது முதியவர்
பெர்விக்-ஆன்-ட்வீட்(Berwick-upon-Tweed) பகுதியை சேர்ந்த 65 வயதுடைய நபர் HGV லொறியை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
அவர் மீது ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும், பின்னர் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார். முதன்மை காவல்துறை அதிகாரி டிம் ஃபோர்பர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். "ரோசியின் குடும்பத்திற்கும், இந்த சம்பவத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த மற்றொரு நபரின் குடும்பத்திற்கும் நாங்கள் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |