குற்றவாளியை துரத்திச் சென்ற பொலிசாருக்கு அபராதம்: என்ன காரணம் கூறப்பட்டுள்ளது தெரியுமா?
சுவிட்சர்லாந்தில், குற்றவாளி ஒருவரின் வாகனத்தைத் துரத்திச் சென்ற பொலிசார் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து அவர் நீதிமன்றம் சென்றுள்ளார்.
குற்றவாளியை துரத்திச் சென்ற பொலிசாருக்கு அபராதம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், குடிபோதையில் வாகனம் ஓட்டிச்சென்ற ஒருவரை, பொலிசார் ஒருவர் பொலிஸ் வாகனத்தில் துரத்திச் சென்றுள்ளார். பின்னர் குற்றவாளியை அவர் கைது செய்துள்ளார்.
ஆனால், அவர் வேகக்கட்டுப்பாட்டை மீறி வாகனம் ஓட்டியதாகக் கூறி, அதிகாரிகள் அவருக்கு அபராதம் விதித்துள்ளார்கள்.
ஆகவே, தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து அந்த பொலிசார் பெடரல் நீதிமன்றம் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவரது சட்டத்தரணிகள், இந்த வழக்கு, பொலிசார் குறைவான நேரத்தில் எவ்வளவு கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |