பிரித்தானியாவில் பெண்களைத் துஷ்பிரயோகம் செய்த 1539 பொலிஸார்: 13 பேர் மட்டுமே பணி நீக்கம்!
பிரித்தானியாவில் கடந்த ஆறு மாதங்களில் 1500-க்கும் மேல் பொலிஸ் அதிகாரிகள் பெண்களைத் துஷ்பிரயோகம் செய்திருப்பது அம்பலமாகியிருக்கிறது.
பெண்கள் மீதான வன்முறை
பிரித்தானியா நாட்டில் பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் பொறுப்பிலிருக்கும் காவல்துறையே குற்றங்களைச் செய்துள்ளது. கடந்த ஆறுமாத இடைவெளியில் 1500-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பெண்களைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
ஆனால் இதுவரை ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
@agencies
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதிலும் உள்ள பொலிஸ் படைகளிடமிருந்து முதன் முறையாக சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள், தவறான நடத்தையில் ஈடுபட்ட காவல்துறையினர் பற்றிய விசாரணைகளில் 13 பேருக்கு மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
புள்ளி விவரம்
ஆண் அதிகாரிகள் பெண்களை துஷ்பிரோயம் செய்வதோடு, தங்களோடு பணிபுரியும் பெண் பொலிஸ் அதிகாரிகளைத் துஷ்பிரயோகம் செய்வதாகப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
@lan francies
கடந்த அக்டோபர் 2021 முதல் மார்ச் 2022 வரை NPCC ஆனது மொத்தம் 1,177 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான காவல்துறை வன்முறை வழக்குகளை (VAWG) கணக்கிட்டுள்ளது இதில் 55 சதவீதம் தவறான நடத்தை மற்றும் 45 சதவீதம் பொது புகார்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
பல வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளன, ஆனால் இறுதி செய்யப்பட்டவற்றில், நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளில் 70 சதவீதமும், புகார்களில் 91 சதவீதமும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
@pa media
மொத்தம் 1,539 காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர், இது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் உள்ள மொத்த பணியாளர்களில் 0.7 சதவீதமாகும்.