பிரித்தானியாவில் நடு ரோட்டில் பொலிஸ் அதிகாரிக்கு முத்தமிட்டு கொஞ்சிக் கொண்டிருந்த பெண்! கமெராவில் சிக்கிய காட்சி
பிரித்தானியாவில் ரோந்து பணியில் இருக்கும் பொலிசார் மற்றும் பெண் அதிகாரி இருவரும் காரின் உள்ளே முத்தமிட்டுக் கொள்ளும் வீடியோ காட்சி வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பிரித்தானியாவின் Blackburn-ல் உள்ள Carl Fogherty Way-யிலே இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் கார் உள்ளே இருக்கும் பொலிஸ் அதிகாரி மற்றும் பெண் அதிகாரி இருவரும் மாறி மாறி முத்தமிட்டுக் கொள்கின்றனர்.
அதன் பின் பெண் அதிகாரி வெளியில் வந்து, மீண்டும் டிரைவர் இருக்கும் சீட் பக்கம் வந்து முத்தம் கொடுக்கிறார். இதில் பெண் அதிகாரி, குறித்த நேரத்தில் வேலை இல்லை என தெரிகிறது.
இந்த சம்பவத்தை அங்கு கார் வேலை காரணமாக நின்று கொண்டிருந்த போது, அங்கிருந்த நபர் வீடியோவாக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து Lancashire காவல்துறை இது குறித்து விளக்கமளித்துள்ளது. அதில், இந்த சம்பவம் ஒரு தனிமைப்படுத்தப்பட்டவை, இருப்பினும் இப்படி நடந்து கொண்டதற்கு அந்த ஜோடி மன்னிப்பு கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.