பிரித்தானியாவில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார்? பொலிசார் சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரித்தானியாவின் Plymouth-ல் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்து டெவன் மற்றும் கார்ன்வால் பொலிஸ் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவின் Plymouth-ல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் 22 வயதான Jake Davison என டெவன் மற்றும் கார்ன்வால் பொலிஸ் அதிகாரப்பூர்வமாக பெயரை வெளியிட்டுள்ளது.
Keyham பகுதியில் ஒரு வீட்டிற்குள் நுழைந்த Jake Davison முதலில் துப்பாக்கியால் பெண் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளார், பின் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்து Biddick Drive பகுதியில் வைத்து சிறுமியையும், அவருடன் வந்த உறவினர் ஒருவரையும் கூட்டுக்கொன்றார்.
பின் சாலைக்கு வந்த Davison, இரண்டு பேரை சுட்டுள்ளார், இதில் காயமடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, parkland-ல் வைத்து மற்றொரு நபரை சுட்டதில், அந்த நபர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிறகு Henderson Place-ல் பெண் ஒருவரை சுட்டார், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அப்பெண் உயரிழந்தார்.
Officers took "six minutes" to respond to Plymouth shooting, Devon and Cornwall Police Chief Constable Shaun Sawyer says.https://t.co/OW5dEYC17s pic.twitter.com/D24RA9fyog
— Sky News (@SkyNews) August 13, 2021
இறுதியில், பொலிசார் பிடிப்பதற்குள் Davison தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டார் என டெவன் மற்றும் கார்ன்வால் பொலிஸ் தெரிவித்துள்ளது.
மேலும், Jake Davison துப்பாக்கியை பயன்படுத்த உரிமம் வைத்துள்ளார், ஆனால், அவர் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்திய துப்பாக்கிக்கு உரிமம் வைத்துள்ளாரா என்பது தெரியவில்லை.
அவர் இந்த தாக்குதலுக்கு pump action shotgun-ஐ பயன்படுத்தியுள்ளார், சம்பவயிடத்திலிருந்து துப்பாக்கியை நாங்கள் கைப்பற்றியுள்ளோம்.