ஜேர்மன் விமான நிலையமொன்றில் மீண்டும் பரபரப்பை உருவாக்கியுள்ள சம்பவம்
Police probe security incident at Leipzig airport: ஜேர்மனியின் Leipzig விமான நிலையத்தில் மீண்டும் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
ஜேர்மனியின் Leipzig விமான நிலையத்திலுள்ள வேலியின் ஒரு பெரும் பகுதி சேதமடைந்துள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
மீண்டும் பரபரப்பை உருவாக்கியுள்ள சம்பவம்
ஆகத்து மாதம், Leipzig விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் முன்பகுதியில் ஏதோ மோதியதைத் தொடர்ந்து அந்த விமானம் வேறொரு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.

பின்னர், விமான நிலையத்தின் ஓடுபாதையில், வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்படவே, பெரும் பரபரப்பு உருவானது.
இந்நிலையில், அதே Leipzig விமான நிலையத்தில், மீண்டும் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
ஆம், விமான நிலையத்திலுள்ள வேலியின் ஒரு பெரும் பகுதி சேதமடைந்துள்ளது.

அது, வாகனம் ஒன்று மோதி வேலியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு என சந்தேகிக்கப்படுகிறது.
அந்த பகுதியின் அருகே, ரஷ்யா மீதான தடைகள் காரணமாக, மூன்று ரஷ்ய சரக்கு விமானங்கள் 2022ஆம் ஆண்டு முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.