பாலஸ்தீன ஆதரவாளர்கள் குடியிருப்புகளை சோதனையிட்ட ஜேர்மன் பொலிசார்... தடையும் விதிப்பு
ஹமாஸ் படைகளை ஆதரிப்பதாக குறிப்பிட்டு பாலஸ்தீன ஆதரவு குழு ஒன்றை ஜேர்மன் அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.
இஸ்ரேலிய எதிர்ப்பு
ஜேர்மனியில் பாலஸ்தீன ஆதரவு நபர்களின் குடியிருப்புகளை பொலிசார் சோதனைக்கு உட்படுத்தியதாகவும், ஹமாஸ் ஆதரவு ஆவணங்கள் அல்லது கருவிகள் என பறிமுதல் செய்யவும் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாகவும் North-Rhine Westphalia பகுதி உள்விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் Herbert Reul தெரிவிக்கையில், பாலஸ்தீன ஆதரவு குழுவினர் தொடர்ச்சியாக இஸ்ரேலிய எதிர்ப்பு மற்றும் யூத எதிர்ப்பை முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.
நேரிடையான கூட்டங்களிலும் சமூக ஊடகங்களிலும் அவர்கள் முன்வைக்கும் கருத்து இஸ்ரேலிய எதிர்ப்பு மற்றும் யூத எதிர்ப்பு என்பதே என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே சுமார் 50 பொலிசார் பாலஸ்தீன ஆதரவு மக்களின் குடியிருப்புகளை சோதனைக்கு உட்படுத்தி மடிக்கணினிகள், பணம், செல்போன்கள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்ததாக அமைச்சர் Herbert Reul தெரிவித்துள்ளார்.
ஆனால் பாலஸ்தீன ஆதரவு குழு தொடர்புடைய நடவடிக்கை குறித்து இதுவரை கருத்தேதும் பகிர்ந்துகொள்ளவில்லை. 2023 மே மாதம் முதலே அந்த பாலஸ்தீன ஆதரவு குழுவினரை அதிகாரிகள் கண்காணித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு தீவிரவாத இயக்கம்
மேலும், ஜேர்மனியின் ஆயுத தயாரிப்பாளர்களில் ஒருவரான Rheinmetall நிறுவனத் தலைமையகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் இந்த குழு முன்னெடுத்துள்ளது. அத்துடன் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதிக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் ஹமாஸ் ஆதரவு அல்லது ஜேர்மனியில் அதன் செயல்பாடுகள் அனைத்தையும் தடை செய்து அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது. ஜேர்மனியை பொறுத்தமட்டில் ஹமாஸ் படைகளை ஒரு தீவிரவாத இயக்கமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது பாலஸ்தீன ஆதரவு குழுவான Palestine Solidarity Duisburg என்ற அமைப்பும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |