பிரித்தானிய பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு பயங்கர சிகிச்சை ஒன்று நடப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலால் பரபரப்பு
பிரித்தானிய பள்ளி ஒன்றில், மாணவிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு சிகிச்சை நடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் அங்கு விரைந்தனர்.
பர்மிங்காமிலுள்ள அந்த பதிவு செய்யப்படாத பள்ளியை பொலிசார் சோதனையிட்டபோது, அங்கு ஒரு அறை பூட்டப்பட்டிருந்திருக்கிறது.
அந்த அறைக்குள் நுழைந்த பொலிசார், அங்கு படுக்கை ஒன்றும் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களும் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக அந்த பள்ளியிலிருந்த 32 மற்றும் 61 வயதுடைய ஆண்கள் இருவர் உட்பட மொத்தம் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கிழக்கு லண்டனைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதால், இந்தப் பள்ளியில் இல்லாமல் வேறு பள்ளிகளிலும் இந்த பெண்ணுறுப்புச் சிதைப்பு சிகிச்சை செய்யப்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
பிரித்தானியாவில் எத்தனை பேர் இந்த கொடூர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதற்கான சரியான எண்ணிக்கை தெரியவில்லை.
ஆனால், 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, பிறந்த குழந்தைகள் முதல் 14 வயது வரையிலான சிறுமியர் வரை, 60,000 பெண் பிள்ளைகள் இந்த பெண்ணுறுப்புச் சிதைப்புக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.