பிரித்தானியாவில் பிரபல கால்பந்தாட்ட வீரர் வீட்டை சோதனையிட்ட பொலிசார்: அதிரவைத்த காட்சி...
இங்கிலாந்தில், பிரபல கால்பந்தாட்ட வீரர் ஒருவருடைய வீட்டை பொலிசார் சோதனையிட்டபோது, அங்கு ஒரு கஞ்சா பண்ணையே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வீட்டுக்குள் கஞ்சா பண்ணை
சமீப காலமாக, பிரித்தானியாவில் வீடுகளுக்குள் கஞ்சா செடி வளர்ப்பதைக் குறித்த செய்திகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் 1,000 வீடுகளை பொலிசார் சோதனையிட்டார்கள், 1,000 பேர் கைது செய்யப்பட்டார்கள். சுமார் 130 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டன.
Credit: Getty
இந்நிலையில், இங்கிலாந்தில், பிரபல கால்பந்தாட்ட வீரர் ஒருவருடைய வீட்டை பொலிசார் சோதனையிட்டார்கள். அப்போது அந்த வீட்டுக்குள் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வீட்டில் வாழ்ந்து வந்த பெண்
அந்த வீட்டுக்குள் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவது தெரியவந்ததும், உடனடியாக பொலிசார் அந்த கால்பந்து வீரரை தொடர்புகொண்டுள்ளார்கள். அப்போது, அவர் அந்த வீட்டை பெண் ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளது தெரியவந்தது.
ஆகவே, அந்த வீட்டில் வாழ்ந்துவந்த பெண்ணை பொலிசார் விசாரணைக்குட்படுத்தினார்கள். விசாரணையில், கஞ்சா செடி வளர்க்கும் கும்பல் ஒன்று, அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தி அங்கு கஞ்சா செடிகளை வளர்த்துவந்தது தெரியவந்தது.
Credit: Getty
அந்த கால்பந்து வீரர், தான் தன் வீட்டை வேறொருவருக்கு வாடகைக்கு விட்டிருந்ததை ஆதாரங்களுடன் நிரூபித்ததால், அவர் தண்டனையிலிருந்து தப்பியுள்ளார். அத்துடன், அந்த வீட்டில் வாடகைக்கு வசித்துவந்த பெண்ணும் அப்பாவி என தெரியவந்ததால், அவரையும் பொலிசார் விடுவித்துள்ளார்கள்.
கஞ்சா செடிகள் அழிக்கப்பட்ட நிலையில், பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |