12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி?
பொலிஸ் பணியில் சேர்ந்த ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ரூ.28 லட்சம் சம்பளம்
இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், விதிஷா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த 2011-ம் ஆண்டில் பொலிஸ் பணியில் சேர்ந்தார். இவர் போபால் போலீஸ் லைனில் பணி நியமனம் செய்யப்பட்டார்.
இவருக்கு அடிப்படை பயிற்சிகளை வழங்க வேண்டும் என்பதற்காக சார் போலீஸ் பயிற்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவர் பயிற்சி மையத்திற்கு செல்லாமல் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் அதற்கு மாறாக தனது பயிற்சி குறித்த விவரங்களை மட்டும் ஸ்பீட் போஸ்ட்டில் போபால் பொலிஸ் லைனுக்கு அனுப்பி வைத்தார். அதாவது, தான் பயிற்சி மையத்தில் இருப்பது போல காட்டி கொண்டார்.
இதனை அதிகாரிகள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் மாத சம்பளம் வழங்கப்பட்டது. அதாவது, அவரது வங்கி கணக்கில் கடந்த 12 ஆண்டுகளாக மாதந்தோறும் சம்பளம் சென்றது. அதன்படி மொத்தம் ரூ.28 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார்.
2011ம் ஆண்டில் பணியில் சேர்ந்த பொலிசாருக்கான சம்பள உயர்வு நடவடிக்கை தொடங்கிய போது தான் இது பற்றி தெரியவந்தது. இவர் 2013-ம் ஆண்டில் சிக்கினார்.
பின்னர் அவரை பொலிஸார் விசாரித்த போது மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் பணிக்கு செல்லவில்லை என்றும் கூறினார். அதோடு மருத்துவ சான்றிதழ்களையும் வழங்கியுள்ளார்.
மேலும், பணிக்கே வராமல் பெற்ற சம்பளத்தை திரும்ப செலுத்தும்படி பொலிஸார் கூறினர். ஆனால், அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். அந்த இளைஞரிடம் இருந்து தற்போது ரூ.1.50 லட்சம் பெறப்பட்டுள்ளது. மீதம் உள்ள பணத்தை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |