புலம்பெயர்ந்தோர் மையம் முன் வன்முறையில் ஈடுபட்ட எட்டு பேரை தேடும் பொலிசார்
இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் தங்கவைக்கப்பட்டுள்ள ஹொட்டல் முன் வன்முறையில் ஈடுபட்ட எட்டு பேரை பொலிசார் தேடிவருகிறார்கள்.
பிரித்தானியா முழுவதும் போராட்டம்
பிரித்தானியாவின் லங்காஷயர் பகுதியை சேர்ந்த Axel Muganwa Rudakubana (17) என்னும் சிறுவன், Southport பகுதியில் சிறார்களுக்கான நடன வகுப்பில் நுழைந்து திடீரென்று சரமாரியாக கத்தியால் தாக்குதல் நடத்தத் துவங்கினான்.
இதில் 11 சிறார்கள் உட்பட 13 பேர்கள் படுகாயமடைந்தனர். அவர்களில் மூன்று சிறுமிகள் மரணமடைந்துள்ள சம்பவம், நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எட்டு பேரை தேடும் பொலிசார்
பிள்ளைகளைக் கொன்ற சிறுவன் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவன் என்றும், புலம்பெயர்ந்தவன் என்றும் சமூக ஊடகங்களில் செய்தி பரப்பப்பட, மசூதிகளுக்கு தீவைப்பு, பொலிசார் மீது தாக்குதல் முதலான வன்முறை சம்பவங்கள் பரவிவருகின்றன.
இந்நிலையில், இங்கிலாந்தின் ஹாம்ப்ஷையரிலுள்ள Aldershot என்னும் இடத்தில் அமைந்துள்ள Potters International Hotel என்னும் ஹொட்டல் முன் ஒரு கூட்டம் போராட்டக்காரர்கள் குவிந்தார்கள்.
புதன்கிழமை மாலை 6.45 மணிக்கு சுமார் 200 பேர் அங்கு குவிந்த நிலையில், அவர்களில் சிலர் வன்முறையில் இறங்கியுள்ளார்கள்.
கட்டிடங்களுக்கு சேதம், இனரீதியான விமர்சனம், துஷ்பிரயோகம் அவமதிப்பு ஆகிய குற்றச்செயல்கள் அங்கு நிகழ்ந்துள்ளன.
இந்த துரதிர்ஷ்ட சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார், வன்முறையில் ஈடுப்பட்ட எட்டு பேருடைய புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை தேடிவருகிறார்கள்.
அவர்களைக் குறித்த தகவல் ஏதாவது கிடைத்தால் உடனடியாக தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு அவர்கள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |