லண்டனில் பரபரப்பாக இயங்கும் இடத்தில் விலையுயர்ந்த பொருள் கொள்ளை! குற்றவாளி புகைப்படம் வெளியானது
லண்டனில் அதிக விலை மதிப்புள்ள கடிகாரத்தை கொள்ளையடித்த நபரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
மத்திய லண்டனில் தான் இந்த சம்பவம் கடந்தாண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடந்துள்ளது. அப்போது மாலை 5.15 மணியளவில் நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கடை ஒன்றுக்குள் செல்ல முயன்றார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் கீழே தள்ளிவிட முயன்றார். பின்னர் அவர் கையில் கட்டியிருந்த விலை உயர்ந்த கடிகாரத்தை பறித்து சென்றார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்துக்குரிய நபரின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அவர் நல்ல உயரமாக இருப்பார் எனவும், சாம்பல் நிற பேஸ்பால் தொப்பி, கருப்பு நிற ஆடை அணிந்திருப்பார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.