பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அவர் ஆபத்தானவர்! லண்டன் பொலிசார் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
பிரித்தானிய தலைநகர் லண்டனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தானவர் என கூறி நபர் ஒருவரின் சமீபத்திய புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டு எச்சரித்துள்ளனர்.
அதன்படி Daniel Joslin (40) என்பவர் எப்போதும் தாடியுடன் இருக்கும் நிலையில் தற்போது தாடியை எடுத்துவிட்டு தலைமுடியையும் மொட்டையடித்துவிட்டு சுற்றி கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ள பொலிசார் அவரின் சமீபத்திய சிசிடிவி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
Daniel மே மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் பதிவுசெய்யப்பட்ட பாலியல் குற்றவாளி அறிவிப்புக்கு இணங்கத் தவறியதற்காக பொலிசாரால் தேடப்படுகிறார்.
Met Police
Daniel ரக்பி இரயில் நிலையத்தில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் நிபந்தனை ஜாமீனை மீறிய வழக்கும் அவர் மீது உள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அவர் ஆபத்தானவராக கருதப்படுவதால், Daniel-ஐ யாரும் அணுக வேண்டாம் என்றும், அவரை கண்டால் உடனடியாக 999 ஐ டயல் செய்யவும் பொலிசார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
Metropolitan Police