நள்ளிரவு 1 மணிக்கு வீட்டுக்குள் புகுந்த இளைஞனால் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த நிலை! சிசிடிவி புகைப்படத்துடன் முக்கிய தகவல்
அமெரிக்காவில் நள்ளிரவு 1 மணிக்கு வீடு ஒன்றில் புகுந்து மாற்றுத்திறனாளி பெண்ணை வன்கொடுமை செய்துவிட்டு மேலும் ஒரு பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் தொடர்பிலான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள போண்டனா நகரில் தான் இந்த அதிர்ச்சி சம்பவங்கள் நடந்துள்ளது.
கடந்த 1ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் அங்குள்ள வீட்டுக்குள் நுழைந்த இளைஞன் வயதான மாற்றுத்திறனாளி பெண்ணை துஷ்பிரயோகம் செய்திருக்கிறான்.
பின்னர் அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டுக்குள் சென்று இன்னொரு பெண்ணையும் பாலியல் ரீதியாக துன்புறுத்திவிட்டு தப்பியோடியுள்ளான்.
இதில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர். அவரின் வயது 20ல் இருந்து 30க்குள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மர்ம நபர் கருப்பு நிற டீ சர்ட்டும், சாம்பல் நிற ஷார்ட்ஸும் அணிந்திருப்பது புகைப்படத்தில் தெரிகிறது.
அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.