லண்டனை உலுக்கிய ஆசிரியை கொலை சம்பவம்: சிசிடிவி காட்சியில் சந்தேகநபர் மறைக்கும் அந்த மர்ம சிவப்பு பொருள் என்ன? வெளிவரும் அதிர்ச்சி தகவல்
லண்டனை உலுக்கிய 28 வயது ஆசிரியை கொலை சம்பவத்தில், அவர் எந்த பொருளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது குறித்து புலனாய்வாளர்கள் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
28 வயதான தொடக்கப்பள்ளி ஆசிரியை சபீனா நெஸ்ஸா (Sabina Nessa) கடந்த செப்டம்பர் 17-ஆம் திகதி தென்கிழக்கு லண்டனில் உள்ள கிட்ப்ரூக்கில் உள்ள தனது குடியிருப்பில் இருந்து, அருகிலுள்ள ஒரு பப்பில் நண்பரைச் சந்திக்க நடந்து சென்றபோது, அருகிலுள்ள கேடர் பூங்காவில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் அடுத்த நாள் பூங்காவிற்கு செல்லும் சில பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது, அவரது சடலம் இலைகளின் குவியலின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் பிரித்தானியாவில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சமீபத்திய நாட்களில் நடந்த கொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 2 பேரை, பொலிஸார் மீண்டும் கைது செய்து விசாரணை செய்தனர். அனால், வெள்ளிக்கிழமை அவர்கள் இருவரும் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.
அதன் பிறகு, நெஸ்ஸா தாக்கப்பட்ட இடத்துக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவிலிருந்து கிடைத்துள்ள புதிய சிசிடிவி காட்சி ஆதாரங்களின் அடிப்படையில், பொலிஸார் மூன்றாவதாக ஒரு நபரை தேடி வருகின்றனர். அந்த நபர் மீதே முழு சந்தேகமும் இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கிடைத்துள்ள அந்த 12-வினாடி சிசிடிவி வீடியோ கிளிப்பை ஆராய்ந்து பார்த்த்துள்ளனர். அதில் ஒரு வழுக்கை தலை கொண்ட நபர் கருப்பு நிற ஹூடி கோட் மற்றும் சாம்பல் நிற ஜீன்ஸ் அணிந்து செல்கிறார்.
அப்போது அவர் கையில் வைத்திருக்கும் ஒரு மின்னக்கூடிய சிகப்பு நிறப் பொருளைப் மறைக்க முயல்வதும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், அந்த காட்சியை மேலும் ஆராய்ந்து பார்த்த புலனாய்வாளர்கள், அந்த மர்ம பொருள் ஒரு குளிர்பான கேனாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த கேனை வைத்து தான் சபீனா நெஸ்ஸா அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவர்கள் நம்புவதாக தெரிவித்துள்ளனர்.



