உயிர் பலி வாங்கும் பேய் பங்களா... பொலிசார் கண்டுபிடித்த உண்மை
அஹமதாபாதிலுள்ள பங்களா ஒன்றில் பேய் நடமாடுவதாகவும், அது உயிர் பலி வாங்குவதாகவும் செய்திகள் பரவத்துவங்கின.
அவற்றை மூட நம்பிக்கை என்று விட்டுவிடாமல் பொலிசார் துவக்கிய ரகசிய விசாரணை ஒன்று, 34 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த குற்றச்செயல் ஒன்றை வெளிக்கொணர்ந்துள்ளது.
உயிர் பலி வாங்கும் பேய் பங்களா...
அஹாதாபாதிலுள்ள வீடு ஒன்றில் பேய் உலாவுவதாகவும், அது உயிர் பலிவாங்குவதாகவும் செய்திகள் பரவத்துவங்கியுள்ளன.

அந்த வீட்டில் வாழ்ந்துவந்த ஷம்சுதீன் 2015இல் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார், அடுத்தடுத்த ஆண்டுகளில் ஷாலியாபீவி பதான் மற்றும் ஜவ்ராவாலா ஆகிய இருவர் உயிரிழந்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, மந்திரவாதியின் உதவியுடன் பேய் விரட்டும் சடங்குகள் அங்கு நடத்தப்பட்டுள்ளன.
இவற்றை எல்லாம் ரகசியமாக ஆள் வைத்து கண்காணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் பொலிசார்.
பல்வேறு தகவல்கள் உறுதியானதும், அந்த வீட்டில் குறிப்பிட்ட இடத்தை பொலிசார் ஆள் வைத்து தோண்ட, அந்த பள்ளத்திலிருந்து, ஆறு பற்களும் ஏழு முதல் எட்டு எலும்புகளும் கிடைக்க, கிடைத்த தகவல்களின்படி அங்கு ஒரு கொலை நிகழ்ந்தது உறுதியாகியுள்ளது.
பொலிசார் கண்டுபிடித்த உண்மை
விடயம் என்னவென்றால், 1992ஆம் ஆண்டு, காதலர்களான ஃபர்ஸானாவுக்கும் (Farzana Radhanpuri, 40) ஷம்சுதீனுக்கும் (Shamsuddin Khedawala) இடையில் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.
ஷம்சுதீன் ஏற்கனவே திருமணமானவர். ஆக, அவரது மனைவிக்கு கொடுத்த சொத்துக்கு இணையாக தனக்கும் சொத்து வேண்டும் என கேட்டு சண்டையிட்டுள்ளார் ஃபர்ஸானா.
மும்பை பெண்ணான ஃபர்ஸானாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஷம்சுதீன், அவரை அஹமதாபாதிலுள்ள தன் நண்பரான ஷாலியாபீவி வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.
அங்கு வைத்து, ஷம்சுதீனீன் சகோதரரான இக்பால் கேதாவாலா ஃபர்ஸானாவின் கால்களையும், அப்துல் ஜாவ்ராவாலா என்பவர் கைகளையும் பிடித்துக்கொள்ள, ஷம்சுதீன் ஃபர்ஸானாவைக் கொலை செய்துள்ளார்.
பின்னர் அந்த வீட்டில் செப்டிக் டேங்க் இருந்த இடத்தில் பள்ளம் தோண்டி, அங்கு ஃபர்ஸானாவின் உடலை புதைத்துள்ளனர்.
ஆளாளுக்கு எதுவுமே தெரியாததுபோல் தங்கள் வாழ்வைத் தொடர்ந்தாலும், குற்ற உணர்ச்சியும் பயமும் யாரையும் விடவில்லை.
அந்த வீட்டில் பேய் நடமாடுவதைக் கண்டதாக அங்கு வாழும் சிலர் கூறத்துவங்க, அதைத் தொடர்ந்து ஷம்சுதீன் 2015இல் மாரடைப்பால் உயிரிழக்க, அடுத்தடுத்த ஆண்டுகளில் ஷாலியாபீவி பதான் மற்றும் ஜவ்ராவாலா ஆகிய இருவரும் உயிரிழக்க, அங்கிருந்தவர்கள் வீட்டைக் காலி செய்ய அந்த வீட்டுக்கு அதை பேய் பங்களா என்று பெயர் வந்துவிட்டது.
இதற்கிடையில், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரில் சிலர் பேய் விரட்டும் முயற்சிகளைத் துவக்க, ரகசியமாக கண்காணித்துக்கொண்டிருந்த பொலிசார் அந்த வீட்டில் ஃபர்ஸானா புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தைத் தோண்ட, அங்கு பற்கள், எலும்புகள் முதலான சில உடல் பாகங்கள் கிடைத்துள்ளன.
அவை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணையை துவங்கியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |