பிரான்ஸ் கலவரங்களின்போது இளைஞரை சுட்ட பொலிசார்: ஆதரவையும் மீறி நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிரான்சில் போக்குவரத்து பொலிசாரால் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து நாடு முழுவதும் கலவர பூமியானது.
ஜூன் மாதம், 27ஆம் திகதி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் புறநகர் பகுதியான Nanterre என்னுமிடத்தில், Nahel M. என்ற 17 வயது இளைஞர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து நாட்டில் வன்முறை வெடித்தது. அந்த இளைஞரை சுட்டுக்கொன்ற பொலிசார் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
மற்றுமொரு பொலிசார் கைது
அந்த கலவரங்களைத் தொடர்ந்து, Marseille நகரிலும் கலவரம் வெடித்தது. அந்த கலவரத்தின்போது, Hedi (21) என்னும் இளைஞர், தன்னை பொலிசார் தாக்கியதாகவும், ரப்பர் குண்டு ஒன்றால் தான் தாக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பின்பும் தன் கண் பார்வையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரைத் தாக்கிய நான்கு பொலிசார் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் Christophe (35) என்னும் பொலிசார் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
EPA
ஆனால், அவர் சிறையிலடைக்கப்பட்டதற்கு பொலிஸ் யூனியன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தன் கடமையைச் செய்யும்போது பெரிய தவறுகள் செய்தால் கூட, பொலிசாரை சிறையிலடைக்கக் கூடாது என தான் கருதுவதாகத் தெரிவித்திருந்தார் பிரான்ஸ் தேசிய பொலிஸ் துறைத் தலைவரான Frederic Veaux. அவரது கருத்துக்கு மற்ற பொலிஸ் துறையினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றம் அதிரடி முடிவு
இந்நிலையில், Christopheஐ சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி அவரது சட்டத்தரணி Aix-en-Provence நகர நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால், பொலிஸ் துறையினரின் ஆதரவையும் மீறி, Christopheஐ சிறையிலிருந்து விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
CCTV காட்சிகள் Hedi தாக்கப்பட்டதை தெளிவாகக் காட்டுவதாகத் தெரிவித்துள்ள அரசு தரப்பு சட்டத்தரணி, Christopheஐ விடுவிப்பது வழக்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி, அவர் சிறையில்தான் இருக்கவேண்டும் என வாதிட்டார்.
AFP
அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, Hedi தாக்கப்பட்ட விடயத்தில் Christopheஇன் பங்களிப்பு உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், தற்போது அவர் Hedi தாக்கப்பட்ட விடயத்தை பகுதியளவிற்கு ஏற்றுக்கொண்டாலும், முன்னர் அவர் அதை மறுத்தது, அவரது தரப்பு நியாயத்தின் நம்பகத்தன்மையை முற்றிலும் கேள்விக்குள்ளாக்கிவிட்டது என்றும் கூறி, அவரை விடுவிக்க மறுத்துவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |