மில்டன் கெய்ன்ஸ் ரயில் நிலையத்தில் பரபரப்பு துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு
மில்டன் கெய்ன்ஸ் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் காவல்துறையினரால் சுடப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மதியம் 12:55 மணியளவில், நபர் ஒருவர் துப்பாக்கியுடன் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
துப்பாக்கியுடன் இருந்த நபரை தேம்ஸ் வேலி காவல்துறையின் ஆயுதப்படை எதிர்கொண்டது. அப்போது ஏற்பட்ட மோதலில் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
காவல்துறையினர் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்த போதிலும், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அந்த நபர் பிற்பகல் 1:44 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
இந்த சம்பவம் குறித்து சட்ட அமலாக்க அதிகாரிகள் கூறுகையில், "பொதுமக்களுக்கு எந்த விதமான தொடர் ஆபத்தும் இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை" என்று தெரிவித்தனர்.
ரயில் நிலையத்தின் சில நுழைவாயில்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இருப்பினும், லண்டன் நார்த்வெஸ்டர்ன் ரயில்வே நிறுவனம், "ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்" என்று அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தேம்ஸ் வேலி காவல்துறை, சுயாதீன காவல் நடத்தை அலுவலகத்திற்கு (IOPC) தகவல் தெரிவித்துள்ளது.
அவர்கள் இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |