ஒற்றை துப்பாக்கிச் சூடு... பற்றியெரியும் பிரான்ஸ்: பொலிஸ் வன்முறைக்கு பலியான இளைஞர் நஹெல் யார்?

Crime Paris Death
By Arbin Jun 30, 2023 10:11 AM GMT
Report

பிரான்சின் பல்வேறு நகரங்களில் கலவரம் வெடிக்க காரணமான, பொலிஸ் வன்முறைக்கு பலியான 17 வயது இளைஞர் மற்றும் அவரது குடும்ப பின்னணி தொடர்பில் முழு தகவல் வெளியாகியுள்ளது.

பொலிஸ் வன்முறைக்கு இரையானவர்

பாரிஸ் நகரின் மேற்கில் Nanterre பகுதியில் தாயார் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்த 17 வயது இளைஞர் நஹெல் எம் என்பவரே பொலிஸ் வன்முறைக்கு இரையானவர். தாய்க்கு ஒரேயொரு மகனான நஹெல் எம், உணவு விநியோக சாரதியாகவும், ரக்பி லீக் விளையாட்டு வீரராகவும் இருந்துள்ளார்.

ஒற்றை துப்பாக்கிச் சூடு... பற்றியெரியும் பிரான்ஸ்: பொலிஸ் வன்முறைக்கு பலியான இளைஞர் நஹெல் யார்? | Police Shooting Nanterre Nahel Riots @reuters

கல்லூரியில் பதிவு செய்திருந்தாலும், படிப்பில் ஆர்வமில்லாத இளைஞர். மட்டுமின்றி Nanterre பகுதியில் அனைவருக்கும் அறிமுகமான இளைஞராகவும் திகழ்ந்துள்ளார். தாயார் மௌனியா உடன் வாழ்ந்து வந்தாலும், தந்தை யார் என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்றே கூறுகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை வேலைக்கு செல்லும் முன்னர், தாயாருக்கு முத்தமிட்டு, அன்பு செய்கிறேன் என கூறிவிட்டு சென்றவர் பின்னர் சடலமாகவே திரும்பியுள்ளார். பகல் 9 மணியளவில், பொலிசாரால் மார்பில் சுடப்பட்ட நிலையில் சடலமாக இளைஞர் நஹெல் மீட்கப்பட்டார்.

ஒற்றை துப்பாக்கிச் சூடு... பற்றியெரியும் பிரான்ஸ்: பொலிஸ் வன்முறைக்கு பலியான இளைஞர் நஹெல் யார்? | Police Shooting Nanterre Nahel Riots @epa

எனது மொத்த வாழ்க்கையும் அவனுக்காக வாழ்ந்தேன், எனக்கு ஒரே ஒரு பிள்ளை, இனி நான் என்ன செய்வேன் என தாயார் மௌனியா கதறியது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

கொலை செய்வதற்கான உரிமை

வாகனத்தை நிறுத்த மறுப்பது என்பது கொலை செய்வதற்கான உரிமையை தந்துவிடாது என இந்த விவகாரம் தொடர்பில் காட்டமாக பதிலளித்துள்ளார் சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் ஒலிவியர் ஃபாரே.

கடந்த மூன்று ஆண்டுகளாக Pirates of Nanterre என்ற ரக்பி அணியில் நஹெல் விளையாடி வருகிறார். போதை மருந்து அல்லது துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மத்தியில் சமூக ரீதியாகவும் தொழில்முறை ரீதியாகவும் நஹெல் பாராட்டுக்குரியவர் என்கிறார் இன்னொரு இளைஞர்.

ஒற்றை துப்பாக்கிச் சூடு... பற்றியெரியும் பிரான்ஸ்: பொலிஸ் வன்முறைக்கு பலியான இளைஞர் நஹெல் யார்? | Police Shooting Nanterre Nahel Riots @getty

அல்ஜீரியா வம்சாவளி என்பதால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்பட கூடாது என சிலர் குறிப்பிட்டுள்ளனர். நீங்கள் கருப்பின மக்கள் அல்லது அரேபிய வம்சாவளி என்றால், பொலிஸ் வன்முறைக்கு நாளும் இலக்காகும் நிலை பிரான்சில் உள்ளது என்கிறார் இளைஞர் ஒருவர்.

பொலிஸ் கண்காணிப்பில்

ஆனால் நஹெல் விவகாரம் இனவாதம் அல்ல, நீதிக்கான போராட்டம் என குறிப்பிட்டுள்ளார் இவர்கள் தரப்பு சட்டத்தரணி Yassine Bouzrou. எந்த குற்றவியல் பின்னணியும் இல்லாத நஹெல் 2021ல் இருந்தே பொலிஸ் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார் என்பதுடன், ஒத்துழைக்க மறுத்தார் என குறிப்பிட்டு ஐந்து முறை பதிவு செய்யப்பட்டுள்ளார்.

ஒற்றை துப்பாக்கிச் சூடு... பற்றியெரியும் பிரான்ஸ்: பொலிஸ் வன்முறைக்கு பலியான இளைஞர் நஹெல் யார்? | Police Shooting Nanterre Nahel Riots @ap

மேலும், கடந்த வார இறுதியில், இதே ஒத்துழைக்க மறுத்தார் என குற்றஞ்சாட்டி பொலிசாரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற சூழலில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US