கடத்தப்பட்ட அப்பாவி இளம்பெண்ணை சுட்டுக்கொன்ற பொலிசார்: வெளியாகியுள்ள வீடியோ ஆதாரம்
அமெரிக்காவில். கடத்தப்பட்ட அப்பாவி இளம்பெண் ஒருவரை பொலிசார் சுட்டுக்கொல்லும் வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
கடத்தப்பட்ட அப்பாவி இளம்பெண்
2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி, கலிபோர்னியாவில் வாழ்ந்துவந்த Anthony Graziano என்பவர், தனது மனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு தங்கள் மகளான Savannah Graziano (15)ஐ கடத்திச் சென்றுவிட்டார்.
பொலிசார் Savannahவை தீவிரமாகத் தேடிவந்த நிலையில், மறுநாள், அதாவது, செப்டம்பர் 27ஆம் திகதி, Anthonyயின் காரை லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சற்று தொலைவில் மடக்கினார்கள்.
பொலிசார் Savannahவை தீவிரமாகத் தேடிவந்த நிலையில், மறுநாள், அதாவது, செப்டம்பர் 27ஆம் திகதி, Anthonyயின் காரை லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சற்று தொலைவில் மடக்கினார்கள்.
Anthonyயின் கார் சுற்றி வளைக்கப்பட, இருதரப்புக்கும் துப்பாக்கிச் சண்டை நடக்க, ஒரு கட்டத்தில், Savannah காரிலிருந்து இறங்க, பொலிசாரில் ஒருவர் தன்னிடம் வந்துவிடுமாறு Savannahவை அழைக்க, அவள் அந்த பொலிசாரை நோக்கி நடந்துவரும்போது அவள் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டாள்.
வெளியான ஆதாரம்
அவளை சுட்டுக்கொன்றது பொலிசாரா அல்லது அவளது தந்தையா என்பது தெரியாத நிலையில், அவளது தந்தையையும் பொலிசார் சுட்டுக்கொன்றுவிட்டனர். ஆனால், உண்மையில் Savannahவை சுட்டது பொலிசார்தான்.
அதற்கு ஆதாரமாக ஒரு வீடியோ இருந்துள்ளது. ஆனால், இரண்டு ஆண்டுகளாக பொலிசார் அதை வெளியிட மறுத்துவந்துள்ளார்கள்.
@WomanDefiner Poor girl.
— DosXXMachina (@DuosEquis) April 2, 2024
Teenage kidnapping victim Savannah Graziano is gunned down by cops while running towards them for help as one officer is heard pleading with deputies to 'stop shooting her' in horrific new helicopter footage pic.twitter.com/P4PNvE62iv
தற்போது, Savannahவை பொலிசார் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தக் காட்சிகள் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் உருவாக்கியுள்ள நிலையில், கலிபோர்னியா நீதித்துறை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |