ஜேர்மனியில் மக்களை கத்தியால் தாக்கிய நபர்! துப்பாக்கியால் சுட்ட பொலிஸார்..பரபரப்பு சம்பவம்
ஜேர்மனியில் ஒரு வலதுசாரி ஆர்ப்பாட்டத்தின் போது, கத்தியால் தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆர்ப்பாட்டம்
தென்மேற்கு நகரமான Mannheimயில் உள்ள மத்திய Marktplatz சதுக்கத்தில் வலதுசாரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது கத்தியுடன் வந்த நபர் ஒருவர் கூட்டத்தினரை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் நபர் ஒருவரின் காலில் வெட்டு விழுந்ததுடன், பொலிஸ் அதிகாரி ஒருவரும் கழுத்தில் வெட்டப்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து தாக்குதல் நடத்திய நபரை மற்றொரு அதிகாரி துப்பாக்கியால் சுட்டார். குறித்த நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஆபத்து எதுவும் இல்லை
இந்த நிலையில் தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் அல்லது நோக்கங்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மேலும் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே காயம் ஏற்பட்டது குறித்த விவரங்களும் தெரிவிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இனி பொதுமக்களுக்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்றும் பொலிஸார் கூறினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |