பிரான்சில் ரோந்து சென்ற பொலிசாருக்கு வீசிய நெடி: கண்ட காட்சி
பிரான்சில் பொலிசார் ரோந்து சென்றபோது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடித்த நெடியில், மோப்ப நாய்களே தேவையில்லை, அங்கு என்ன பிரச்சினை என்பதை அவர்களே கண்டுபிடித்துவிட்டார்கள்.
கார் கண்ணாடியையும் தாண்டி வீசிய நெடி
பிரான்சிலுள்ள Thonon-les-Bains என்னுமிடத்தில் ரோந்து சென்றுகொண்டிருந்த பொலிசார், கார் கண்ணாடியையும் தாண்டி அடித்த நாற்றத்தால், காரை விட்டு இறங்கி எங்கிருந்து அந்த நாற்றம் அடிக்கிறது என்பதைக் காணச் சென்றுள்ளார்கள்.
அப்போது, அருகிலுள்ள வயல் ஒன்றில் ஒரு குறிப்பிட்ட அளவு இடம் சுத்தம் செய்யப்பட்டு, அங்கு கஞ்சா செடி வளர்க்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டுள்ளார்கள். அந்த கஞ்சா செடிகள் அறுவடைக்குத் தயாராக இருந்துள்ளன.
அந்த இடத்திலிருந்து 5 கிலோ எடையுள்ள கஞ்சா செடிகளை பொலிசார் அகற்றியுள்ளார்கள். அவற்றின் மதிப்பு 50,000 யூரோக்களுக்கும் அதிகமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |