சாய்னா நேவால் விவகாரம்! நடிகர் சித்தார்த்துக்கு புதிய தலைவலி... பிடி இறுகுகிறதா?
பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் சித்தார்த் கருத்து கூறிய விவகாரம் குறித்து சென்னை சைபர் கிரைம் பொலிசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.
அண்மையில் பஞ்சாப் சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக கருத்து பதிவிட்டிருந்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், இந்த விவகாரம் தொடர்பாக கடுமையான கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மற்ற சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும்? என்று கேள்வி எழுப்பியதோடு பாரத் ஸ்டேண்ட் வித் மோடி, என்ற ஹேஷ்டாக்கையும் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கு எதிர் வினையாற்றும் நோக்கில் வழக்கம் போல டுவிட்டரில் கருத்து பதிவிட்டார் நடிகர் சித்தார்த். அதில் அவர் செட்டில்கார்க்கில் விளையாடும் வீராங்கனை சாய்னா நேவாலை மிகவும் ஆபாசமாக குறிப்பிட்டு கருத்து பதிவிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
சித்தார்த்தின் இந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது, சித்தார்த்தின் சர்ச்சை கருத்து குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி கேட்டுக் கொண்டிருந்தது.
இதனிடையில் தன்னை மன்னித்து விடுமாறும், நீங்கள் எப்போதும் சாம்பியன் தான் எனவும் சாய்னாவிடம் டுவிட்டர் மூலம் தெரிவித்தார் சித்தார்த். இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் குறித்து விசாரணை நடத்த சென்னை காவல் துறைக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இதையடுத்து சட்ட நிபுணர்களுடன் சென்னை போலீசார் ஆலோசனை நடத்தினார். இந்த விசாரணையின்போது நடிகர் சித்தார்த்தின் டுவிட்டர் பதிவுகள் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டன.
நிபுணர்கள் வழங்கும் ஆலோசனை அடிப்படையில் இந்த வழக்கை சென்னை சைபர் கிரைம் பொலிசாருக்கு மாற்றி அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ள நிலையில், நடிகர் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்யவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, இது சித்தார்த்துக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.