பொலிஸ் நிலைய ஊழியர் படுகொலை... புதிய சட்டம் கொண்டுவர பிரான்ஸ் முடிவு
பிரான்சில் பொலிஸ் நிலைய ஊழியர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தீவிரவாதத்துக்கெதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், புதிய சட்டம் ஒன்றை பிரான்ஸ் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
ஏப்ரல் 23ஆம் திகதி, தென்மேற்கு பாரீஸில் அமைந்துள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் பெண் ஊழியர் ஒருவர், Jamel Gorchene (36) என்ற துனீசிய நாட்டவர் ஒருவரால் குத்திக்கொல்லப்பட்டார்.
அதைத் தொடர்ந்து Jamel பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். விசாரணையில் அவர் இஸ்லாமிய தீவிரவாத கருத்துக்கள் கொண்டவர் என்பது தெரியவந்தது.
இந்த துயர சம்பவம் தொடர்பாக ஐந்துபேர் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அரசின் கொள்கைகள் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன.
குறிப்பாக, அரசும் ஐரோப்பிய ஒன்றியமும் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கெதிராக போராடுவதில் தோற்றுப்போனதையே இந்த தாக்குதல் காட்டுவதாக மாகாண கௌரவ கவுன்சிலரும், புலம்பெயர்தல் அமைச்சகத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவருமான Patrick Stefaniniயும் விமர்சித்துள்ளார். Jamel 2009ஆம் ஆண்டே சட்டவிரோதமாக பிரான்சுக்குள் நுழைந்துள்ளார்.
2019இல்
பிரான்சில் வாழ அவருக்கு அதிகாரப்பூர்வ அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.