சுவிஸ் மாகாண எல்லை ஒன்றில் பொலிசாரிடம் சிக்கிய கார்... காருக்குள் என்ன இருந்தது தெரியுமா?
ஜெனீவா மாகாண எல்லையில் பொலிசார் கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளார்கள்.
அப்போது அந்த காரில் ஆறரை கிலோ போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொக்கைன் என்னும் அந்த போதைப்பொருளின் மதிப்பு ஒரு மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் ஆகும்.
ஜெனீவா எல்லையில் Veyrier என்ற இடத்தில் இந்த நபர் சிக்கியிருக்கிறார். தான் மாட்ரிடிலிருந்து சூரிச் நோக்கி செல்வதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது காரில் ஜெனீவாவிலுள்ள Plainpalais என்ற இடத்தின் முகவரி இருந்துள்ளது.
அந்த போதைப்பொருள் கூட்டத்தில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரித்தால், அந்த நபர் தனது குடும்பத்துக்கு ஆபத்து வரும் என்று அஞ்சுவதால், அவர்களைக் குறித்த விவரங்களை கொடுக்க மறுக்கிறார்.
தொடர்ந்து அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அவர் பல ஆண்டுகள் சிறையில் செலவிட நேரிடும் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.